ராய்ட்டர்ஸ் நிருபர்களை விடுவிக்க மியான்மரிடம் ஐ.நா வலியுறுத்தல்!

நாட்டின் ரகசிய சட்டங்களை மீறி உளவு பார்த்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிருபர்களை உடனடியாக விடுவிக்க மியான்மரை ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
 | 

ராய்ட்டர்ஸ் நிருபர்களை விடுவிக்க மியான்மரிடம் ஐ.நா வலியுறுத்தல்!

நாட்டின் ரகசிய சட்டங்களை மீறி உளவு பார்த்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிருபர்களை உடனடியாக விடுவிக்க மியான்மரை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.  

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய உயர் ஆணையாராக பேஷேலெட் செப்டம்பர் 1-ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில் பதவி ஏற்று முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''ரகசிய சட்டத்தை மீறியதாக  2  ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கும் விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  இது மிகப் பெரும் அநீதியாகும். இதனை சரிசெய்ய உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். இது தொடர்பான வலியுறுத்தலை மியான்மரிடம் வைத்துள்ளோம்'' என்றார். 

மியான்மரில் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓவு  என்ற 2 ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர்களுக்கு  ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு  சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் 70 லட்சம் சிறுபான்மையின ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மியான்மர் அரசின் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இவர்களை மேற்கு வங்க குடிஏரிகளாக மியான்மர் நிராகரித்து வருகிறது. 

இதனால் இம்மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கிடையே கடந்த வருடம் ரக்கைன் மாகாணத்தில் புத்த மக்களுக்கும் ரோஹிங்யா மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதையடுத்து ரோஹிங்யா மக்கள் மீது மியான்மர் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. ரக்கைன் மாகாணத்தில் வசித்த ரோஹிங்யா மக்கள் மீது இன அழிப்பு போர் குற்றம் நடந்துள்ளதாக ஏற்கெனவே ஐ.நா ஆணைய அதிகாரிகள் அறிக்கை சமர்பித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து, யாங்கூன்  நகரத்தில் பணிபுரிந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வு நிருபர்கள் செய்தியாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து நிருபர்கள் மீது மியான்மர் அரசு வழக்கு பதிவு செய்து 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP