2019 அக்டோபரில் ரஷ்யாவின் S-400-ஐ கொண்டு வரும் துருக்கி!

ரஷ்ய தயாரிப்பான S-400 விமான தடுப்பு ஏவுகணை திட்டத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பயிற்சி எடுக்க துருக்கி அதிகாரிகள் ரஷ்யா சென்றுள்ளனர்.
 | 

2019 அக்டோபரில் ரஷ்யாவின் S-400-ஐ கொண்டு வரும் துருக்கி!

ரஷ்ய தயாரிப்பான S-400 விமான தடுப்பு ஏவுகணை திட்டத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவின் பிரபல ஏவுகணை தடுப்பு திட்டம் S-400-ஐ இந்தியா துருக்கி உள்ளிட்ட பல நாடுகள்  வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளன. தரையில் இருந்து வான் சென்று, விமானங்களை கூட குறிபார்த்து தாக்கும் வல்லமை படைத்தது S-400 ஏவுகணை திட்டம். ஆனால், இந்த ஏவுகணை திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. S-400 திட்டத்தை கைவிடாவிட்டால், துருக்கியின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அரசு மிரட்டி வருகிறது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், S-400 பயன்பாட்டுக்கு வரும் என துருக்கி பாதுகாப்பு செயலாளர் ஹுலுக்கி அசார் தெரிவித்துள்ளார். மேலும், S-400 குறித்த பயிற்சியை பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் விரைவில் ரஷ்யா செல்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP