லண்டன் மேயர் சாதிக் கானை கைது செய்ய டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

லண்டன் மேயர் சாதிக் கானை கைது செய்ய டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்
 | 

லண்டன் மேயர் சாதிக் கானை கைது செய்ய டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்


அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், லண்டன் அதிபர் சாதிக் கான் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் போராட்டம் நடத்தி அவரை கைது செய்ய வலியுறுத்தினார்கள். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், இனவெறி பிடித்த ட்வீட்கள் செய்வதாகவும், சர்ச்சைக்குரிய விஷயங்களை சொல்லி சிறுபான்மையினர் மீது பழி போடுவதாகவும் அவர் மீது பிரிட்டன் நாட்டு மக்கள் குற்றம்சாட்டி, அவர் பிரிட்டனுக்கு வர தடை விதிக்க கோரினார்கள். இதை இணைய மனுவாக உருவாக்கி அதற்கு லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டது. 

லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற போதும், இஸ்லாமிய அகதிகளை அனுமதிப்பதால் தான் இவ்வாறு நடப்பதாக கூறி டிரம்ப் சர்ச்சையை கிளப்பினார்.

தன் மீது கடும் எதிர்ப்பு இருப்பதை தெரிந்தவுடன், பிரிட்டன் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ஒத்திவைத்தார். பிரிட்டன் நாட்டு இளவரசரின் திருமணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில், டிரம்ப் அதற்கு அழைக்கப்படுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், சமீபத்திய செய்திகளின் படி, டிரம்ப்புக்கு அரச திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படாது என கிசுகிசுக்கப்படுகிறது. அமெரிக்க பெண்ணை பிரிட்டன் இளவரசர் மணக்க உள்ளதால், இது டிரம்ப்புக்கு அவமரியதயாக பார்க்கப்படும்.

இந்நிலையில், ஆப்பிரிக்க மற்றும் சில ஏழை வட அமெரிக்க நாடுகளை, டிரம்ப் சாக்கடை நாடுகள் என குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழும்பியது. இதையடுத்து அவர் மீது மேலும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. டிராம்புக்கும் லண்டன் மேயர் சாதிக் கானுக்கு ம் இடையே அடிக்கடி அறிக்கைகள் மூலம் சண்டை நடக்கும். லண்டன் தீவிரவாத தாக்குதலலின் போதும், "கான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை" என டிரம்ப் விமர்சித்தார்.

நேற்று, சாதிக் கான் ஒரு நிகழ்வில் பேச இருந்தார். அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் அங்கு புகுந்து சாதிக் கானை கைது செய்ய வேண்டும் என கூச்சலிட்டனர். அவர் சர்வாதிகாரம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் 15 நிமிடங்கள் அந்த நிகழ்வு தாமதமானது. பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP