முன்கூட்டியே தேர்தல் அறிவித்த ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்சஸ், ஆட்சியை கலைத்து, தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளா.ர் வரும் ஏப்ரல் 28ம் தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்பெயின் நாட்டில், சோசியலிச கட்சியின் சார்பாக, பெட்ரோ சான்சஸ் பிரதமர் பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக் காலம் முடிவடையும் முன்னதாகவே, நாடாளுமன்ற தேர்தலை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28ம் தேதி தேர்தலை நடத்த நான் பரிந்துரை செய்கிறேன்" என்று அறிக்கை வெளியிட்டார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம்,  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, பெட்ரோ சான்சஸ் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP