புகழ்பெற்ற ஒபேரா பாடகி மான்ஸெரட் கேபல் காலமானார்

மான்ஸெரட் கேபல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பார்ஸிலோனா மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் உடலை விட்டு பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
 | 

புகழ்பெற்ற ஒபேரா பாடகி மான்ஸெரட் கேபல் காலமானார்

உலக புகழ்பெற்ற ஒபேரா பாடகி மான்ஸெரட் கேபல் காலமானார். அவருக்கு வயது 85.

மான்ஸெரட் கேபல் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பார்ஸிலோனா மருத்துவமனையில்  கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் உடலை விட்டு பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1933ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்ஸிலோனாவில் பிறந்தவர் மான்ஸெரட். மேடைக்கச்சேரியில் பாடுவதை சிறு வயதிலேயே தொடங்கி அதில் அசைக்க முடியாத புகழை பெற்றார். பாரம்பரிய இசையை உணர்வுகளுடன் இணைத்து இசைக்கருவிகளோடு சேர்ந்து பாடும் ஒபேரா இசையில் தேர்ந்த கலைஞராக திகழ்ந்தார் மான்ஸெரட். இவ்வாறு தனது துறையில் 50 ஆண்டுகாலம் சாதனைப் படைத்தார். 

இவரது 'ஹை-பிட்ச்' அளவிற்கு உலகில் வேறு எந்த பாடகியாலும் நடுக்கமின்றி பாட முடியாது என்பது மான்ஸெரட்டின் தனிச்சிறப்பு. இவரது பாடல், 1992 பார்ஸிலோனா ஒலிம்பிக்கின் தீம் பாடலாக இருந்த குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP