பத்திரிகையாளர் படுகொலை!- துருக்கி அம்பலப்படுத்திய பகீர் ஆதாரம் 

துருக்கியில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் காணாமல்போன பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை பதிவு செய்து ஆதாரங்களாக விசாரணைக்கு துருக்கி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

பத்திரிகையாளர் படுகொலை!- துருக்கி அம்பலப்படுத்திய பகீர் ஆதாரம் 

துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் காணாமல்போன ஜமால் பத்திரிகையாளர் கஷோகிஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை பதிவு செய்து ஆதாரங்களாக துருக்கி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி, மாயமானார். அவர் அங்கிருந்து வெளியேவரவில்லை .இதில் சவுதி சதி இருப்பதாக விரைவில் ஜமாலை திருமணம் செய்ய இருந்த அவரது காதலி குற்றம்சாட்டினார். துருக்கியில் ஜமால் குறித்து விசாரிக்கும்போது அவர் சவுதி துணைத் தூதரகத்துக்குள் சென்ற காட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்தன. வெளியே வந்ததாக எந்தப் பதிவுகலும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் சவுதிக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் ஏற்பட்டது. விசாரணையை துருக்கி துரிதப்படுத்தியது. 

இந்த நிலையில் சவுதி மீது திட்டவட்டமாக குற்றம்சாட்டிய துருக்கி சில ஆதாரங்களை விசாரணைக்கு சமர்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.  

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், "எங்களுக்குக் கிடைத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2 ஆம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம்'' என்று கூறியுள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

சவுதி அரசை விமர்சித்து ஜமால், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவுகள் ஜமாலின் ஆப்பிள் ஃபோனின் பதிவுகளாக இருக்கலாம் சவுதியை அம்பலப்படுத்த ஜமாலே பதிவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP