இத்தாலி சென்றடைந்தார் சுஷ்மா சுவராஜ்!!

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன் முதற் கட்டமாக நேற்று அவர் இத்தாலி சென்றடைந்தார்.
 | 

இத்தாலி சென்றடைந்தார் சுஷ்மா சுவராஜ்!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அரசு பயணமாக  7 நாட்கள்  இத்தாலி, பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு  பயணம் மேற்கொள்கிறார்.

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன் முதற் கட்டமாக நேற்று அவர் இத்தாலி சென்றடைந்தார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்  7 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அந்தந்த நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்கிறார். இது இந்தியாவுக்கும், அந்த 4 நாடுகளுக்கும் பயன் அளிக்கும்.

21-ந் தேதி, பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். அதனை தொடர்ந்து அவர் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலைந்துரையாடுகிறார்"  இவ்வாறு அதில்  கூறப்பட்டு உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP