சமூக ஊடகங்களுக்கு எதிராக கடுமையான சட்டம்: ஜெர்மனி அரசு முடிவு

வெறுப்பு விதைக்கும் மற்றும் பொய்யான செய்திகள் இடம்பெறாமல் தடுக்க ஜெர்மனி அரசு புதிய சட்ட மசோதாவின் வரைவு வடிவத்தை தாக்கல் செய்ய உள்ளது. இந்த சட்ட மசோதா பயனர்களைத் தாண்டி சமூக வலைதளங்களை நேரடியாகத் தண்டிக்க வகை செய்கிறது.
 | 

சமூக ஊடகங்களுக்கு எதிராக கடுமையான சட்டம்: ஜெர்மனி அரசு முடிவு

சமூகவலைதளங்களில் வெறுப்புப் பதிவு மற்றும் பொய் செய்திகள் இடம்பெறாமல் தடுக்க ஜெர்மனி அரசு புதிய சட்ட விதிகள் கொண்ட மசோதாவின் வரைவு வடிவத்தை தாக்கல் செய்ய உள்ளது. 

சமூகவலைதளங்களில் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் பதிவுகள்  மற்றும் பொய் செய்திகள் நீக்கப்படாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்ற ஜெர்மனி நாட்டின் புதிய சட்ட மசோதா குறித்து அந்நாட்டில் கடந்து ஆண்டு விவாதம் எழுந்தது. 

நெட்வொர்க் அமலாக்க சட்டம் (The Network Enforcement Act) என்ற இந்த சட்ட மசோதா பயனர்களைத் தாண்டி, அந்தந்த சமூக வலைதளங்களை நேரடியாகத் தண்டிக்க வகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மனி அமைச்சரவை கடந்த ஆண்டு ஏப்ரல் 5 அன்றே ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால் ஜெர்மன் நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.  முன், 2015-ஆம் ஆண்டு, பேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜெர்மன் அரசிடம், தங்கள் தளங்களிலிருந்து வெற்றுப்புப் பதிவுகளை, பதிவேற்றப்பட்ட ஒரு நாளுக்குள் நீக்கிவிடுவோம் என்று கூறியிருந்தன. 

ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதைத் தொடர்ந்தே இந்த மசோதா அந்நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பேஸ்புக் தனது பொறுப்பு என்ன என்பதை புரிந்துள்ளது. வெறுப்புப் பேச்சுகளை எதிர்கொள்ள அரசியல் ரீதியான முயற்சிகளையும் வரவேற்கிறது. ஆனால் இதுபோன்ற அளவுக்கதிகமான அபராதம் போன்றவை கண்டிப்பாக சட்டபூர்வமானதல்ல. இவர்கள் நோக்கங்கள் நிறைவேற இந்த மசோதா சரியான வழி அல்ல" என்று குறிப்பிட்டது. அதோடு, ஜுலை மாதத்தில் வன்முறை தூண்டுவதாக அமைந்த நூறுக்கணக்கான பதிவுகளை பேஸ்புக் நீக்கியது. 

இது தொடர்பான கூட்டம் ஜெர்மன் சட்ட அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்றதாக அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.  தொடர்ந்து இந்த சட்டம் வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து நடைமுறைபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இந்த சட்டம் அதிகப்படியான சமூகம் சார்ந்த பதிவுகளை நீக்க வழிவகை செய்யும் என்பதால் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற மாற்றுக் கருத்தும் எழுந்து வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP