கஷோகி மரண மர்மம் அகலும் வரை சவுதிக்கு ஆயுதங்கள் இல்லை: ஜெர்மன் கெடுபிடி 

சவுதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தத்தை ஜெர்மனி ரத்து செய்தது. பத்திரிக்கையாளர் கஷோகியின் மரணத்தில் இருக்கும் மர்மம் அகலும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை இல்லை என ஜெர்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 | 

கஷோகி மரண மர்மம் அகலும் வரை சவுதிக்கு ஆயுதங்கள் இல்லை: ஜெர்மன் கெடுபிடி 

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் மரணத்தில் இருக்கும் மர்மம் அகலும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை இல்லை என ஜெர்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சவுதிக்கு பெருவாரியான ஆயுத விற்பனையை செய்யும் நாடு ஜெர்மனி. இந்த நிலையில் சவுதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தத்தை ஜெர்மனி ரத்து செய்து அந்நாட்டுக்கு மிகப் பெரிய அடியை கொடுத்துள்ளது. ஜமால் கஷோகி மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது என ஜெர்மனி உறுதியாக தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தை தொடர சவுதி அரேபியாக அரசு கோரிக்கை விடுத்தும், அதை ஏற்க மறுத்ததுடன், தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர் அக்டோபர் 2 ம் தேதி துருக்கி நாட்டு காதலியை திருமணம் செய்வதற்காக தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார்.

இதற்கு சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளே காரணம் எனவும், அவர்கள் ஜமாலை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சவுதி அரசு மறுத்து வந்தது. பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் அவரது உடல் பதுக்கப்பட்ட இடம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் சவுதியின் முரணான கருத்துகளை சர்வதேச நாடுகள் கண்டித்து வருகின்றன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP