பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்: போப் காரணத்தால் அதிர்ச்சி 

பல நாடுகளிலும் பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் எழும் சூழலில் இதன் பின்னணியில் சாத்தான்கள் உள்ளதாக போப் பிரான்சிஸ் கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்: போப் காரணத்தால் அதிர்ச்சி 

பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். இந்தப் பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் கேரளாவில், கன்னியாஸ்திரிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் பாதிரியார்க் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகினார். அதே போல் அமெரிக்காவின் தியோடர் மெக்காரிக் என்ற பாதிரியார் பதவி நீக்கப்பட்டார். அயர்லாந்திலும் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல் அதிர்வை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பேசுகையில், ''பாதிரியர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் பின்னணியில் சாத்தான்கள் உள்ளன. பாதிரியார்களின் உள் இருக்கும் சாத்தான்கள் தான் இப்படி செய்ய தூண்டுகின்றன. அவை பாதிரியார்களின் நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளன.'' என தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸின் இந்தப் பேச்சு அந்த சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் பலரும் போப் பிரான்சிஸுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ''இது சாத்தானால் நடந்த தவறல்ல, மனிதர்களின் ஒழுக்கக் கேட்டால் நடந்த தவறு. அதனை திருத்தப் பாருங்கள் காரணம் தேடாதீர்கள்'' என்பது போலான கருத்துக்களை பலரும் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

Newstm. in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP