ரஷ்ய போர்விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்... விமானிகள் மாயம்..!

ரஷ்யா விமானப்படையை சேர்ந்த இரண்டு போர்விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாகவும், ஜப்பான் கடலில் அருகே விழுந்து நொறுங்கியதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
 | 

இரண்டு ரஷ்யா போர் விமானங்கள், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. ஜப்பான் கடலில், கடற்கரைக்கு அருகே சுமார் 35 கிமீ தொலைவில் விமானங்கள் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த விமானிகள், விமானத்தில் இருந்து வெளியேறி பாராஷூட்டை இயக்கியதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள், விமானங்களின் நிலை என்ன என்பது பற்றியும் உறுதிபட தகவல்கள் வெளியாகவில்லை. 

விமானிகளை மீட்க, மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு போர் விமானங்களில், ஏவுகணைகள் எதுவும் இல்லை என்று ரஷ்யா பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP