ரஷ்யா: பாதசாரிகள் மீது டேக்சி மோதியது: தீவிரவாத தாக்குதலா?

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரு டேக்சி கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.
 | 

ரஷ்யா: பாதசாரிகள் மீது டேக்சி மோதியது: தீவிரவாத தாக்குதலா?

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரு டேக்சி கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

உலகக் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ரஷ்யாவில் குவிந்துள்ளனர். போட்டிகள் நடக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும், வெளிநாட்டு ரசிகர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில், இன்று திடீரென ஒரு டேக்சி, சாலையோரம் சென்றுகொண்டிருந்த பாதாசரிகள் மீது மோதியது. இதில் 8 பேர் காயமடைந்தனர். மெக்சிகோவை சேர்ந்த சில கால்பந்து ரசிகர்களும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். 

டேக்சியின் ஓட்டுநர் கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 28 வயது இளைஞர் என போலீசார் தெரிவித்துள்ளார். வாகனத்தின் பிரேக்குக்கு பதில் மாற்றி மிதித்தால் வண்டி கட்டுப்பாட்டை இழந்து சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களில் வாகனங்களை ஆயுதமாக பயன்படுத்தி நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

முன்னதாக அமெரிக்க உளவுத்துறை,  ரஷ்யாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வாகனம் வேகமாக சென்று பாதசாரிகளை  இடித்துத் தள்ளி, ஒரு கம்பத்தில் இடித்து நிற்பது தெரிகிறது. ஓட்டுனரை அங்கிருந்த மக்கள் துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP