ரொமேனியாவின் முதல் பெண் பிரதமர் பதவியேற்றார்

ரொமேனியாவின் முதல் பெண் பிரதமர் பதவியேற்றார்
 | 

ரொமேனியாவின் முதல் பெண் பிரதமர் பதவியேற்றார்


ரொமேனியா நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றனர். 

 54 வயதான விரோசியா டான்சிலா, சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணை தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2016 தேர்தலில் இவரது சமூக ஜனநாயக கட்சி, 45% இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால், நிலையான கூட்டணி இல்லாமல், ஆட்சியமைக்க தடுமாறி வந்தது அந்த கட்சி. 13 மாதங்களில் அமைக்கப்படும் 3வது அரசு இதுவாகும். 

மற்ற கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் லிபரல் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கிறார் டான்சிலா. "இந்த புதிய அரசு மூலம், கடந்த வருடத்தில் இருந்த வந்த நிலையில்லா அரசியல் சூழ்நிலை மாறும் என எதிர்பார்க்கிறோம்" என்று டான்சிலா கூறினார். 

மேலும், " 2020ம் ஆண்டுக்குள், ஐரோப்பிய கண்டத்தின் முதல் 10 நாடுகளுள் ரொமோனியா ஒன்றாக உருவாகும். நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போக வேண்டும். ஏற்கனவே வெளிநாட்டில் உள்ள நமது நாட்டின் மக்கள், இங்கு திரும்ப வர வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP