ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவில் காமசட்கா தீபகற்ப பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6. 1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனைத் தொடர்ந்து பலமுறை அங்கு நில அதிர்வுகளும் உணரப்பட்டன. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
 | 

ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான காமசட்கா தீபகற்பத்தை ஒட்டிய கடல்புரத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரஷ்யாவில் காமசட்கா தீபகற்ப பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6. 1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனைத் தொடர்ந்து பலமுறை அங்கு நில அதிர்வுகளும் உணரப்பட்டன. நிலநடுக்க பீதியால் கரையோரம் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. கடந்த மாதம் இதே தேதியில் 5. 7 என்ற அளவில் ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் பதிவானது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP