பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட் குண்டு வெடிப்பு: குற்றவாளி கைது

பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட் குண்டு வெடிப்பு: குற்றவாளி கைது
 | 

பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட் குண்டு வெடிப்பு: குற்றவாளி கைது


ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 27ம் தேதி மாலை தீடீர் என்று வெடித்த வெடிகுண்டால் 18பேர் படுகாயம் அடைந்தனர். இத்துயர் சம்பவத்தை தொடர்ந்து, ரஷ்ய போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனிடையே  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு  ஐ எஸ் அமைப்பினர் பொறுப்பு ஏற்றுள்ளனர். 


இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் மேம்பட்ட வெடிப்பு சாதனத்தைத் தூண்டிய அமைப்பாளர் மற்றும் நேரடி குற்றம்சாட்டப்பட்டவர் FSB வின் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்  என்று ரஷ்ய செய்தி நிறுவனம் Interfax தெரிவித்துள்ளது. சந்தேக நபரான 35 வயதான டிமிட்ரி லுகானென்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குடியுரிமை மற்றும் தேசியவாத "NEW AGE" இயக்கத்தின் உறுப்பினராக இருந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த 2015ம் ஆண்டு சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ராணுவத்தை அனுப்பியதால் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ரஷ்யாவை முக்கிய குறியாகக் கருதுகிறது.  செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவின் இரண்டாவது நகரம் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டினுடைய சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இங்கு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மெட்ரோ வெடி குண்டு தாக்குதலில் 15பேர் பலியாகினர், மேலும் பலர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். தொடர்ந்து ரஷ்ய நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால், அடுத்த ஆண்டு (2018) அங்கு நடைபெற உள்ள கால்பந்து உலக கோப்பை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.     

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP