போட்டியும் இல்லை பொறுப்பும் இல்லை: ஓய்வை அறிவித்தார் ஜெர்மன் தலைவர் எஞ்ஜலா மெர்கல் 

தனது பதவிக் காலம் முடிவடைவதோடு, அரசியலிலிருந்து விலகப் போவதாகவும் தனது மோசமான செயல்திறனுக்கு முழு பொறுப்பேற்று கட்சியின் அடுத்த தலைவரையும் தான் தேர்வு செய்யப் போவதில்லை என்றும் ஜெர்மன் தலைவர் ஏஞ்ஜலா கூறியுள்ளார்.
 | 

போட்டியும் இல்லை பொறுப்பும் இல்லை: ஓய்வை அறிவித்தார் ஜெர்மன் தலைவர் எஞ்ஜலா மெர்கல் 

2021ஆம் ஆண்டு, தனது பதவிக் காலம் முடிவடைவதோடு, அரசியலிலிருந்து விலகப் போவதாக ஜெர்மன் தலைவர் ஏஞ்ஜலா மெர்கல் அறிவித்துள்ளார். 

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்து இந்த முடிவு குறித்து அவர் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "என் பதவிகாலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன். கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவராக கூட மீண்டும் மறு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை'' எனக் கூறியுள்ளார். 

தனது மோசமான செயல்திறனுக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறிய மெர்கல், கட்சியின் அடுத்த தலைவரையும் தான் தேர்வு செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார். 

ஜெர்மனில் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவராக 2000ஆம் ஆண்டிலிருந்து எஞ்ஜலா கட்சியின் தலைவராக உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெசி மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்தது. கிறிஸ்துவ ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணி கட்சியான சமூக ஜனநாயக கட்சியும் முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பினை விட 10 சதவீத புள்ளிகள் குறைந்திருநதன.

மெர்கலின் துணைக் கட்சியான பவரியா கிறிஸ்துவ சமூக கட்சியும் அந்நாட்டு நாடாளுமன்ற வாக்கெடுப்புல் பேரிழப்பை சந்தித்தது. ஜெர்மன் தலைவராக நான்கு முறை பதவி வகித்துள்ள ஏஞ்ஜலா மெர்கல், ஐரோப்பிய யூனியன் அரசியலில் அசைக்க முடியாத சக்தி வாய்ந்த தலைவராக வளம் வந்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP