ஜெர்மனியில் நிலையான ஆட்சிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பம்!

ஜெர்மனியில் நிலையான ஆட்சிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பம்!
 | 

ஜெர்மனியில் நிலையான ஆட்சிக்கு   பேச்சுவார்த்தை ஆரம்பம்!


ஜெர்மனியில் நிலவும்  அரசியல் நெருக்கடியை  முடிவுக்கு கொண்டுவர, புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல்  தொடங்கியுள்ளார்.

ஜெர்மனியில் தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், புதிய ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலை நீடித்து வருகின்றது. கடந்த 12 ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் இடது மத்தியவாத சமூக ஜனநாயக கட்சியும் மெர்கலின் வலது மத்தியவாத கட்சியுமான கிறித்துவ ஜனநாயகத்துவாதிகள் கட்சியும் இணைந்தே ஆட்சி நடத்தி வந்தன. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கிடைத்த மோசமான முடிவுகளால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலை உருவானது. 

முன்பு கூட்டணியிலிருந்த சமூக ஜனநாயக கட்சி எதிர்க்கட்சியாக செயல்படும் என அக்கட்சியின் தலைவர் மார்ட்டின் ஸ்க்லஸ் அறிவித்தார்.

சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி கண்டதை அடுத்து சமூக ஜனநாயக கட்சி கூட்டணியில் இணைய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அக்கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை மெர்கல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் மெர்கலின் கிறித்துவ ஜனநாயகவாதிகள் கட்சி, கிறித்துவ சமூக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சிவாதிகள் கட்சி ஆகியவை பங்குபெற உள்ளன. 

குடிவரவு, ஐரோப்பிய உறவு, வரி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் உள்ள கருத்து மாறுபாடுகள் கூட்டணி சிக்கல்களுக்கான காரணங்களாக அறியப்படுகின்றன. நிலையான கூட்டணியை உருவாக்க இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே சமயம் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில், மூன்றில் ஒரு ஜெர்மனிய வாக்காளர் இக்கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடையும் எனத் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கட்சிகளின் மெகா கூட்டணி புத்துயிர பெற்றால் ஜெர்மனிய எதிர்காலத்திற்கு சாதமாக அமையும் என 54 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP