தேசியவாதம் மிகவும் ஆபத்தானது: பிரென்ச் அதிபர் மேக்ரான்

முதலாம் உலகப் போரை முடிந்ததன் 100வது ஆண்டு நினைவேந்தல் விழா நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அனுசரிக்கப்பட்டது. இதில் பேசிய பிரென்ச் அதிபர் மேக்ரான், தேசியவாதத்தால் உலக அமைதிக்கு ஆபத்து என்றார்.
 | 

தேசியவாதம் மிகவும் ஆபத்தானது: பிரென்ச் அதிபர் மேக்ரான்

முதலாம் உலகப் போரை முடிந்ததன் 100வது ஆண்டு நினைவேந்தல் விழா நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அனுசரிக்கப்பட்டது. இதில் பேசிய பிரென்ச் அதிபர் மேக்ரான், தேசியவாதத்தால் உலக அமைதிக்கு ஆபத்து என்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், முதலாம் உலகப்போரை முடித்து வைத்த போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 100 ஆண்டுகள் ஆனதை அனுசரிக்கும் நினைவேந்தல் விழா நடைபெற்றது. இந்தியா, ஜெர்மனி, ரஷ்யா, கனடா, பிரிட்டன் உட்பட 70  நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து தலைவர்களும் கொட்டும் மழையில் நடந்து சென்று, பிரெஞ்சு அதிபர் மாளிகை அருகே உள்ள முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னத்தில் தங்களது மரியாதையை செலுத்தினர்.

இந்த விழாவில் பேசிய பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான், உலகம் முழுவதும் தேசியவாதம் பரவி வருவதாகவும், அதனால் உலாகி அமைதிக்கு என்றுமே ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்தார். "தேசியவாதம் என்பது தேசப்பற்றுக்கு எதிரானது. பழைய தவறுகளை மீண்டும் செய்து வருகிறோம். சரித்திரத்தில் நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்தால், உலக அமைதிக்கு கேடு ஏற்படும். இன்று அனைத்துக்கும் மேல் அமைதியை முதலாவது குறிக்கோளாக நாம் வைக்க வேண்டும்" என்று பேசினார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட முக்கிய நாடுகளில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில், கடும் வலது சாரி கட்சிகள் தேசியவாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து முன்னேற்றம் கண்டதை குறிப்பிட்டு மேக்ரான். இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

மழை பெய்வதை காரணமாக கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவரது இந்த முடிவு சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளனது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP