அமெரிக்காவை தவிர்த்து வல்லரசு நாடுகள் ஈரானுடன் ஆலோசனை 

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன், ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வரும் 6ஆம் தேதி வியன்னாவில் கூடி விவாதிக்கின்றனர்.
 | 

அமெரிக்காவை தவிர்த்து வல்லரசு நாடுகள் ஈரானுடன் ஆலோசனை 

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன், ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வரும் 6ம் தேதி வியன்னாவில் கூடி விவாதிக்கின்றனர்.

ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தன்னிச்சையாக முறித்துக்கொண்டது. தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும்படியான அறிவிப்புகளை அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்பட சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளில் எண்ணெய் உற்பத்தியில் தவிர்க்க முடியாத நாடாக விளங்கி வரும் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் தாங்கள் ஒப்பந்தத்தை தொடர்வதாக மற்ற வல்லரசு நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஈரானுடன், சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆலோசனை நடத்த உள்ளன. இந்த 5 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசுகின்றனர்.  

இந்த சந்திப்பின்போது,  அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்காவின் நிலைப்பாடு, அதன் நெருக்கடியை சமாளிப்பது, கச்சா எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அமெரிக்காவைத் தவிர்த்த வல்லரசு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களும் விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP