மொபைல் ஃபோனே கதியா!-கொதித்து போராட்டத்தில் எழுந்த ஜெர்மன் குழந்தைகள் 

ஜெர்மனியில் 'பெற்றோர்களே மொபைல் போன் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்' என்ற முழுக்கத்துடனும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஜெர்மனி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
 | 

மொபைல் ஃபோனே கதியா!-கொதித்து போராட்டத்தில் எழுந்த ஜெர்மன் குழந்தைகள் 

தங்களது பெற்றோர்கள் மொபைல் போனே கதி என இருப்பதாக ஜெர்மனியில் திரண்ட குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் சிறுக் குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள், 'பெற்றோர்களே மொபைல் போன் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்' என்ற முழுக்கத்துடனும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஜெர்மனி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. 

இந்தப் போராட்டத்தில் எமில் என்ற சிறுவன் இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தினான். இந்தச் சிறுவன் பெற்றோரின் மொபைல் மோகத்தால் தனித்து விடப்பட்டன் ஆவான். போராட்டத்தின்போது, இது குறித்து அவர் கூறுகையில், ''போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் ஃபோன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இனியாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள். மேலும், குழந்தைகளை தவிக்க விடும் பெற்றோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தான். இதே போல மற்ற சிறுவர்களும் இதே கோரிக்கையை விடுத்தனர். இந்தப் போராட்டம் வியப்பையும் அனைவரையும் கவனம் கொள்ள வைப்பதாக இருந்தது. 

தற்போதைய சூழலில் குழந்தைகள் தனித்து விடப்படுவதால் கவனிக்க நேரமில்லாமல் பெரிய அளவில் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாமல் கூட இருப்பதற்கு செல்போன்களே காரணமாக இருக்கிறது. ஜெர்மனியில் இது குறித்த வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன. இதனால் தனித்துவிடப்பட்ட குழந்தைகள் ஜெர்மனியில் சொந்த பெற்றோருக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP