ஜெர்மன் சான்சலர், அதிபர் உள்ளிட்டோரை குறிவைத்த மெகா 'ஹேக்'!

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மையர் உட்பட நூற்றுக்கணக்கான ஜெர்மன் தலைவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு, பொதுத் தளத்தில் பகிரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஜெர்மன் சான்சலர், அதிபர் உள்ளிட்டோரை குறிவைத்த மெகா 'ஹேக்'!

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மையர் உட்பட நூற்றுக்கணக்கான ஜெர்மன் தலைவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு, பொதுத் தளத்தில் பகிரப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திடீரென ஜெர்மனியில் உள்ள நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக் செய்யப்பட்டன. இதில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்ட்டர் ஸ்டெயின்மையர் உட்பட நூற்றுக்கணக்கானோர் குறிவைக்கப்பட்டனர். தலைவர்களின் தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி, வங்கி கணக்கு விவரங்கள், கட்சி ஆவணங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இந்த ஹேக் மூலம் இணையதளத்தில் லீக்கானது.

பல்வேறு பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் விவரங்களும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தின் தலைவர்களும் இதில் குறிவைக்கப்பட்ட நிலையில், கடும் வலதுசாரி கட்சியான, சர்ச்சைக்குரிய AfD கட்சியை சேர்ந்த ஒருவரும் இதில் சிக்கவில்லை.

ஜெர்மன் அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முக்கியமான அரசு ரகசியங்கள், பாதுகாப்பான விவரங்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP