வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கஷோகியின் காதலி 

பத்திரிகையாளர் கஷோகியின் படுகொலையை விசாரிப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று ஜமால் கஷோகியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறியுள்ளார். அத்துடன் வெள்ளை மாளிகை அழைப்பையும் அவர் நிராகரித்துள்ளார்.
 | 

வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கஷோகியின் காதலி 

ஜமால் கஷோகி படுகொலை விசாரணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்மையாக இல்லை என்று கூறி வெள்ளை மாளிகைக்கு வர அவர் விடுத்த அழைப்பை கஷோகியின் காதலி நிராகரித்துள்ளார். 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலையை விசாரிப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று ஜமால் கஷோகியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறியுள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹட்டீஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அத்துடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் ட்ரப்ம் தனக்கு விடுத்த அழைப்பையும் அவர்  நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கஷோகியை படுகொலை செய்யவில்லை என்று சாதித்த சவுதி அரசு, திடீரென விசாரணையின் போது தவறுதலாக கஷோகி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ சவுதி சென்றபோது கூறி சமரசத்தில் ஈடுபட்டதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர் அக்டோபர் 2 ம் தேதி துருக்கி நாட்டு காதலி ஜெங்கிஸை திருமணம் செய்வதற்காக தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார்.

இதற்கு சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளே காரணம் எனவும், அவர்கள் ஜமாலை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சவுதி அரசு மறுத்து வந்தது. பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் அவரது உடல் பதுக்கப்பட்ட இடம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் சவுதியின் முரணான கருத்துகளை சர்வதேச நாடுகள் கண்டித்து வருகின்றன. 

தொடர்புடையவை:

'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP