பாகிஸ்தான் அடக்குமுறையை எதிர்த்து இத்தாலியில் போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளை கண்டித்து இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பிரபல கோலோசியம் நேற்று சிகப்பாக மாற்றப்பட்டது.
 | 

பாகிஸ்தான் அடக்குமுறையை எதிர்த்து இத்தாலியில் போராட்டம்

பாகிஸ்தான் அடக்குமுறையை எதிர்த்து இத்தாலியில் போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளை கண்டித்து இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பிரபல கோலோசியம் நேற்று சிகப்பாக மாற்றப்பட்டது. 

நூற்றுக்கணக்கான இத்தாலிய கிறிஸ்தவர்கள் கோலோசியம் வந்து, பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பிபி என்ற பெண்ணுக்கு ஆதரவு போராட்டம் நடத்தினர். 

2009ம் ஆண்டு பாகிஸ்தானில் வசித்து வந்த பிபி, தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கிறிஸ்தவரான பிபி, தங்களது பாத்திரத்தில் தண்ணீர் குடித்ததால், அது களங்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிபி இஸ்லாமிய மதத்தை பற்றியும், இஸ்லாமிய கடவுளை பற்றியும் தவறாக பேசியுள்ளதாக கூறப்டுகிறது. அதற்காக பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. 

இந்த விஷயத்தில் பிபிக்கு உதவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 

பாகிஸ்தான் நாட்டில் கடவுளை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். சமூக வலைதளங்களில் சர்சைக்குரிய கருத்துக்களை எழுதுபவர்களுக்கு கூட கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல சம்பவங்களில் போதிய ஆதாரமில்லாமல், மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் மீது பழி போடப்படுகிறது. 

சர்வதேச அளவில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், விளக்குகளால் ரோம் கோலோசியம் முழுவதையும் சிகப்பாக மாற்றி தங்களது ஆதங்கத்தை இத்தாலி நாட்டிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிபி-யின் கணவர் மற்றும் அவரது மகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். போப்பாண்டவர் பிரான்சிஸ், தங்களை அழைத்தது ஆறுதல் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP