ஈரான் மீதான தடை: சர்வதேச நீதிமன்றத்தை மீறுமா அமெரிக்கா?

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ரத்து செய்ய ஈரான் தொடுத்த வழக்கின் விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 | 

ஈரான் மீதான தடை: சர்வதேச நீதிமன்றத்தை மீறுமா அமெரிக்கா?

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ஈரான் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.  இது தொடர்பான விசாரணை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

இந்த விசாரணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர், ''மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் ஈரானின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும். எனவே மனிதாபிமான அடிப்படையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்'' என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை நீதிபதி அப்துல்ஹாவி அகமது யூசுப் நேற்று பிறப்பித்தார்.  மேலும் விமான பாகங்கள் மீதான தடைகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

மறுக்கும் அமெரிக்கா..

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையற்ற ஒன்று என அமெரிக்க அரசுத் தரப்பு நிராகரித்துள்ளது. 

பின்னணி:

அமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் 1995ல் ஏற்படுத்தப்பட்டது. கனடா,  இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். 

பின்னர் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபரான ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாகவும் ஒப்பந்தத்தை 3 முறை மீறியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதனை வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால் ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பவில்லை.  இதனைத் தொடர்ந்து ஒபாமா ஆட்சிக்காலத்தில் செய்துக்கொண்ட இந்த ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக கூறிய ட்ரம்ப், ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டுமானால் ஈரான் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உடன்பாட்டு அம்சங்களை ஈரான் மீறி விட்டதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்தது, சில தடைகளை மறுவிதிப்பு செய்து, தொடர்ச்சியான பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளது.  தனது நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா அதன் வெளியுறவுத்துறையின் மூலம் நிர்பந்தித்து வருகிறது. 

இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் அதன் தேவை அதிகரிப்பின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்து சார்வதேச தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, வரும் நவம்பர் மாதம் 4ம் தேதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP