இன்டர்போல் தலைவர் மாயமானார்!

பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் இருந்து சீனா சென்ற இன்டர்போல் நிறுவன தலைவர் மெங் ஹொங்வே, திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுளளது சீன அரசு.
 | 

இன்டர்போல் தலைவர் மாயமானார்!

பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் இருந்து சீனா சென்ற இன்டர்போல் நிறுவன தலைவர் மெங் ஹொங்வே, திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுளளது சீன அரசு. 

பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கி வருகிறது இன்டர்போல் எனும் சர்வதேச காவல்துறை. சர்வதேச அளவில் கிரிமினல் குற்றங்கள் செய்துவருபவர்களை கண்டுபிக்க, உலக நாடுகளின் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹொங்வே கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பிரான்சின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு அவர் சென்றிருந்தார். ஆனால், ஒரு வாரமாகியும், சீனாவில் உள்ள அவரது வீட்டிற்கு மெங் வரவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பிரான்சில் அவர் மாயமாகவில்லை என பிரென்ச் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். 

ஆனால், சீனாவில் அவர் தரையிறங்கியவுடன், அவரை சீன விமான நிலைய அதிகாரிகள் சில கேள்விகள் கேட்க அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தனது பல்வேறு நடவடிக்கைகளால், சீன அரசுடன் மெங் பகைமையை உருவாக்கியதால் அவர் மாயமாகி இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP