ஆபாச மெசெஜை நான் தான் அனுப்பினேன் - அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ஆண்ட்ரூ க்ரிஃப்பித்ஸ் பெண்களுக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

ஆபாச மெசெஜை நான் தான் அனுப்பினேன் - அமைச்சரின் சர்ச்சை பேச்சு

இங்கிலாந்து அமைச்சர் ஆண்ட்ரூ க்ரிஃப்பித்ஸ் பெண்களுக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த இங்கிலாந்து சிறு தொழில் துறை அமைச்சர் ஆண்ட்ரூ க்ரிஃப்பித்ஸ். இவர் காஷ்மீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற அமைப்பின் தலைவராக இருந்தவர். இவர் மீது அண்மையில் பாலியல் புகார் எழுந்துள்ளது. தமது தொகுதியைச் சேர்ந்த 2 பெண்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாசமான மெசேஜ்களை ஆண்ட்ரு அனுப்பியுள்ளார்.

தன்மீது எழுந்த பாலியல் புகார் குறித்து கூறிய ஆண்ட்ருஇ “நான் தவறு செய்தது உண்மைதான், நான் தான் மெசெஜ்களை அனுப்பினேன். என்னுடைய இந்த செயலினால் என் குடும்பத்திற்கும், மனைவிக்கும், அரசுக்கும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டேன். அனைவரும் மன்னித்துவிடுங்கள். இதற்காக நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP