மதகுருமார்களின் பாலின ஈர்ப்பு கவலை அளிக்கிறது: போப் பிரான்சிஸ் கவலை 

தெற்காசிய நாடுகளில் அமைதி நிலவ, சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலமாக இருப்பார்கள் என பாகிஸ்தானிடம் அதிபர் ட்ரம்ப் கூறியதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
 | 

மதகுருமார்களின் பாலின ஈர்ப்பு கவலை அளிக்கிறது: போப் பிரான்சிஸ் கவலை 

பிரம்மச்சரியம் காப்பதான நிலையில் இருந்துகொண்டு தன்பாலின ஈர்ப்பில் மதகுருமார்கள் இருப்பது கவலை அளிப்பதாகவும் அவர்கள் இவ்வாறு இரட்டை வேடம் அணியத் தேவையில்லை என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய போப் பிரான்சிஸ் கூறும்போது, ''தன்பாலின ஈர்ப்பு தற்கால நாகரீகமாகிவிட்டது. இது ஒன்றும் நவீனத்தின் அடையாளம் இல்லை என்பதை உணர வேண்டும். இது தேவாலயங்களைப் பாதிக்கிறது. தேவாலயத்தில் இருப்பவர்கள் இரட்டை வேட வாழ்க்கை வாழ வேண்டாம். கிறிஸ்தவ மத குருமார்கள் இவ்வாறு இருப்பது கவலை அளிக்கிறது. 

தேவலாயத்துக்குள் நுழையும் மதகுருமார்கள் பிரம்மச்சரியத்தின் மீதான உறுதி மொழியை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் மனதளவிலும், உணர்வளவிலும் பக்குவம் அடைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை எவ்வாறு மீறலாம்.  இதுபோன்றவர்களை தேர்வு செய்யும் தேவலாய நிர்வாகத்தினரும் இதில் கவனமாக செயல்பட வேண்டும்.  தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை தேவாலயப் பணிகளுக்கு தேவையில்லை. பெண் போதகர்களுக்கு இதே விதி தான்'' என்றார்.

கிறிஸ்தவ தேவலாயங்களைப் பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு என்பது பாவத்துக்குரிய செயல் என்று கூறப்பட்டது. பின் 2013 ஆம் ஆண்டு,  இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய போப்  பிரான்சிஸ் , ''ஒரு நபர் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக இருந்தால் அவரைது பாத்திரத்தைப் பற்றி தீர்மானிக்க நான் யார்'' என்று கூறியிருந்தார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP