டாக்சி என நினைத்து போலீஸ் வாகனத்தில் ஏறிய கஞ்சா வியாபாரி

டென்மார்க்கில் கஞ்சா வியாபாரி ஒருவர் டாக்சி என நினைத்து போலீஸ் வாகனத்தில் ஏறியுள்ளார்.
 | 

டாக்சி என நினைத்து போலீஸ் வாகனத்தில் ஏறிய கஞ்சா வியாபாரி

டென்மார்க்கில்  டாக்சி என நினைத்து போலீஸ் வாகனத்தில் ஏறிய கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

டென்மார்க் நாட்டில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கிறிஸ்டியானாவில், மிகக் கடுமையான கண்காணிப்பையும் மீறி, சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த பகுதியை சேர்ந்த ஓர் கஞ்சா வியாபாரி, வீட்டுக்கு செல்வதற்காக டாக்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால், அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் ஒன்றை டாக்சி என நினைத்த அவர், அதனை நிறுத்தி ஏறியுள்ளார்.

வாகனத்தில் ஏறிய பிறகுதான் அது போலீஸ் வாகனம் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும், அந்த தருணத்தில் சுமார் 1000 கஞ்சா பொட்டலங்களையும் அவர் தன்னுடன் வைத்திருந்துள்ளார். இந்த கஞ்சா வியாபாரியை நீண்ட நாட்களாக போலீசார் தேடி வந்துள்ளனர். அவராக வண்டியை நிறுத்தி ஏறியதில் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர். தானாக வந்து மாட்டிய கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

வெறும் அபராதத்தோடு அவர் விடுவிக்கப்படுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நிறைய தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவரை இப்போது ஜெயலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேநேரத்தில், கடைசி வரை அவரின் அடையாளம் குறித்து காவல் துறை தகவல் வெளியிடவில்லை. இப்போது, கிறிஸ்டியானாவில்  உள்ள கஞ்சா வியாபாரிகளை குறி வைத்து காவல் துறையினர் தொடர் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP