31 ஆண்டுகளாக பனியில் உறைந்த வீராங்கனை: மெழுகு பொம்மை போல உடல் மீட்பு 

பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய மலையேறும் வீராங்கனையின் உடல், ரஷ்ய பனி மலையில் இருந்து மெழுகு பொம்மை போல் மீட்கப்பட்டுள்ளது.
 | 

31 ஆண்டுகளாக பனியில் உறைந்த வீராங்கனை: மெழுகு பொம்மை போல உடல் மீட்பு 

பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய மலையேறும் வீராங்கனையின் உடல், ரஷ்ய பனி மலையிலிருந்து மெழுகு பொம்மை போல் மீட்கப்பட்டுள்ளது. பனியில் உறைந்து இருந்ததால் அவரது உடல் பதப்படுத்தியது போல காட்சியளித்தது. 

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் எல்பிரஸ் மலை அமைந்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த மலையான இங்கு பல பனி சருக்கு விளையாட்டு வீரர்களும் மலைஏற்ற சாகசர்களும் செல்வது வழக்கம்.  இந்தப் பனிமலை மீது, கடந்த 1987ஆம் ஆண்டு 7 பேர் கொண்ட ரஷ்ய குழுவினர் சென்றனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சென்ற 7 பேரும் உயிரிழந்தனர். 

அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்தப்  பலனும் கிடைக்கவில்லை. பின்னர் சில காலம் கழித்து மீட்புப்  பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் சில சுற்றுலா பயணிகள் குழுவாக எல்பிரஸ் மலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மெழுகு பொம்மை போல உருவத்தை கண்டுள்ளனர். பின்னர் அருகே சென்று பார்த்ததில் அது இறந்த உடல் என்று தெரியவந்துதுள்ளது. 

அதிர்ச்சியடைந்த அவர்கள் பின்னர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆய்வு மேற்கொண்டதில் 1987ஆம் ஆண்டு பனிச்சரிவில் உயிரிழந்த 7 பேரில் ஒருவரான எலினா பஸிகினாவின் உடல் தான் அது என தெரியவந்தது. 

பனி மலைக்குள் சிக்கியதால், அவரது உடல் பதப்படுத்தியது போன்று, மெழுகுச் சிலை தோற்றத்துடன் கிடைத்துள்ளது. எலினாவின் உடலுடன், அவரது ரஷ்ய பாஸ்போர்டும், 10 ஏப்ரல் 1987 தேதியிட்ட ஏரோபிளாட் விமான டிக்கெட்டும் கிடைத்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அவரது உறவினர், எலினா எங்காவது உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அவளைக் காண 30 ஆண்டுகள் ஆகியுள்ளது என்றார். எலினா திருமணம் ஆகாதவர். மாஸ்கோ அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP