Logo

குப்பைகளை அகற்ற காகங்களை பணியமர்த்திய பிரான்ஸ் பார்க்

பிரான்ஸில் தீம் பார்க் ஒன்றில் குப்பைகளை பொறுக்க 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
 | 

குப்பைகளை அகற்ற காகங்களை பணியமர்த்திய பிரான்ஸ் பார்க்

பிரான்ஸில் தீம் பார்க் ஒன்றில் குப்பைகளை பொறுக்க 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. 

மேற்கு பிரான்ஸில் பூய் து ஃபோ என்ற பிரபலமான தீம் பார்க் இயங்குகிறது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அதோடு அவர்கள் விட்டு செல்லும் குப்பைகள் ஏராளமாக குவிகின்றன.  இந்த நிலையில் 6 புத்திசாலி பறவைகளை இந்த தீம் பார்க் பணியமர்த்தி உள்ளது. 

இந்த 6 காகங்களுக்கும் சிகரெட்டை பொறுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த காகங்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றி அதற்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போடும். இதற்கு பரிசாக அதற்கு சிறப்பு உணவுகள் அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வரும். இதனால் உற்சாகமடையும் காகங்கள் இந்தப் பணியை சுறுசுறுப்பாக செய்கின்றன.  

பூங்காவின் தலைவர் நிகோலஸ் டேவிலியர், " பறவைகளை கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது மட்டும் நம் நோக்கமல்ல. இயற்கை சூழலே நமக்கு சூழலியல் குறித்து பாடம் எடுக்கிறது என்பதை உணர்த்துவதுதான் நம் நோக்கம். இந்த காகத்தை பார்த்து பயணிகள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். பொதுவான அளவிலான பொருட்களை தொட்டிக்குள் போடும்போது உணவு வெளியே வருமளவுக்கு பின்னூட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலை மிகச் சரியாக நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். "  என்கிறார். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP