ரஷ்யாவை பொரிந்து தள்ளிய ஐரோப்பிய நாடுகள்!

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடந்த ரசாயன தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் ரஷ்ய அரசின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ரஷ்யா தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பிரிட்டன் அரசு உத்தரவிட பிறகு, தற்போது பிரான்ஸ் நாட்டு அதிபரும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்.
 | 

ரஷ்யாவை பொரிந்து தள்ளிய ஐரோப்பிய நாடுகள்!

ரஷ்யாவை பொரிந்து தள்ளிய ஐரோப்பிய நாடுகள்!

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடந்த ரசாயன தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் ரஷ்ய அரசின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பிரிட்டன் அரசு  உத்தரவிட்ட பிறகு, தற்போது பிரான்ஸ் நாட்டு அதிபரும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார். 

செர்கெய் ஸ்கிரிபால் என்ற ஓய்வுபெற்ற ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது லண்டனில் கடந்த வாரம் கொடிய ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஸ்கிரிபால் தற்போது பிரிட்டன் அரசுக்கு பணியாற்றி வந்ததால் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு பிரிட்டன் அரசு கடும் கண்டனம் தெரிவித்து, 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.

முதலில் மவுனம் காத்த அமெரிக்க அரசும், பிரிட்டனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அரசுகளும், ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் விடுத்துள்ளனர். "இரண்டாம் உலகப்போருக்கு பின், ஐரோப்பிய மண்ணில் நடைபெறும் முதல் ரசாயன தாக்குதல் இது" என பிரிட்டனுடன் இரண்டு நாடுகளும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டின் அதிபர் எமானுவேல் மேக்ரான், ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP