ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்

ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்
 | 

ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்

உக்ரைன் கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள் மீது ரஷ்ய கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உக்ரைனில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது

கடந்த ஞாயிறன்று, உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றிய க்ரைமியாவுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் உக்ரைனுக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 மாலுமிகள் காயமடைந்தனர். அதன் பின்னர் ரஷ்யா சிறப்பு படை வீரர்கள், உக்ரைனுக்கு சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் மற்றும் ஒரு சிறிய கப்பலை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் அங்கு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்கள் எழுப்பின. இந்நிலையில், உக்ரைனில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அதிபர் பெட்ரோ போரோஷென்கோ முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உக்ரைன் எம்.பி.க்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், நாளை முதல் ஒரு மாதத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த ஆதரவளித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP