ஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம்போட்டு கைதான பாடகி- (வீடியோ)

ஈஃபிள் கோபுரத்தின் கீழே அனுமதியின்றி ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தியதாக பல்கேரிய பாடகி மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டனர்.
 | 

ஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம்போட்டு கைதான பாடகி- (வீடியோ)

ஈஃபிள் கோபுரத்தின் கீழே அனுமதியின்றி ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தியதாக பல்கேரிய பாடகி மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டனர்.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகி கிரே நிகோல் என்பவர் தனது தோழியுடன் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் சென்றார். அப்போது பாரீசில் முக்கியப் பகுதியான ஈஃபில் கோபுரத்தை கண்டதும் பூரிப்படைந்தார். அதனால் தனது தோழியுடன் ஈஃபிள் கோபுரம் அடியில் தனது தோழியுடன் திடீரென ஆட்டம் போட்டார்.

இதையடுத்து அனுமதியின்றி நடனம் ஆடியதாகவும், பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்ததாகவும் கூறி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மனதுக்குப் பிடித்த ஈஃபிள் கோபுரத்தை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு நடனம் ஆடியதாக நிக்கோல் தெரிவித்துள்ளார். போலீசாரிடம் விளக்கம் அளித்த நிக்கோல் குறிப்பிட்டத் தொகையை அபராதமாக செலுத்தியுள்ளார்.

பின்பு விடுவிக்கப்பட்ட அவர், தனது இன்ஸ்டாகிராமில் அதன் வீடியோ காட்சிகளை பகிர்ந்து ''நடனத்துக்கு இடம் முக்கியமே இல்லை!'' என்று பதிவிட்டுள்ளார். அவரது விடியோவை 1,20,000 பேர் கண்டுகளித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP