தென் கொரிய கடலில் 200 டன் தங்க குவியல் கண்டுபிடிப்பு! - பேரம் பேசும் கப்பல் நிறுவனம்

சுமார் ரூ.9 லட்சம் கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தென் கோரிய கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 | 

தென் கொரிய கடலில் 200 டன் தங்க குவியல் கண்டுபிடிப்பு! - பேரம் பேசும் கப்பல் நிறுவனம்

சுமார் ரூ.9 லட்சம் கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தென் கொரிய கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

1905ம் ஆண்டில் ஜப்பானுடன் ரஷ்யாவின் டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டது. இது சுஷிமா போர் என அழைக்கப்பட்டது. போரின்போது  ஜப்பானின் தாக்குதலில் அந்த ரஷ்யக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. ஜப்பானில் கைப்பற்றப்பட்ட 200 டன் தங்கத்துடன் அந்தக் கப்பல் ரஷ்யாவுக்கு சென்றதாகவும், பின்னால் வந்த ஜப்பான் கடற்படையினர் அதை தாக்கி மூழ்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தென்கொரிய கடல் பகுதியில் சுமார் 1400 அடி ஆழத்தில், இந்த கப்பல் மூழ்கிக் கிடப்பதை ஷினில் என்ற கடல்சார் சுத்திகரிப்பு குழுமம் கண்டுபிடித்துள்ளது. போர் கப்பலின் 3ல் ஒரு பங்கு சேதமடைந்து இருப்பதாக கூறியிருக்கும் ஷினில், அங்கி வேறு என்ன எஞ்சி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தவில்லை. 

ஆனால், தங்கத்தை மீட்டு பாதுகாப்பாக கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு அதிலிருந்து 10 சதவீதம் கமிஷனாக வழங்கவேண்டும் என ஷினில் குழுமம் ரஷ்யாவிடம் பேரம் பேசி வருகிறது. ஏனெனில் ரஷ்யாவை பொறுத்தவரையில் இது அதிமுக்கியமான கண்டுபிடிப்பு. போரின்போது இந்தக் கப்பலில் தங்கம் கொண்டுசெல்லப்பட்டது வெறும் கட்டுக் கதை என ரஷ்ய வரலாற்று குறிப்புகள் உள்ளன. சில அதனை மறுத்தும் உள்ளன. தங்கக் குவியலைத் தாண்டி அங்கு வேறு ஏதேனும் ரகசியம் இருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP