அடடே... வாக்குறுதியை நிறைவேற்றாததால் ராஜினாமா செய்த பிரதமர்!

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் ஆட்சி செய்துவரும் பிரதமர் ஜுஹா சிப்பிலா தலைமையிலான கூட்டணி, தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதால், அரசை கலைக்க முடிவெடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உலகிலேயே மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் ஒன்று பின்லாந்தாகும். அந்நாட்டில், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அனைத்துமே அரசே வழங்கி வரும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுகாதார நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி இல்லாத நிலை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, இதுகுறித்து அந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 

இந்த நிலையில், 3 கட்சிகள் சேர்ந்து, நடுநிலையாளரான ஜுஹா சிப்பிலாவின் தலைமையில் ஆட்சியமைத்தன. சுகாதாரத்துறை சீர்திருத்தம், மக்கள் நலத்திட்டங்கள் என தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பல முயற்சிகளை அரசு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசின் சுகாதாரத்துறை சீர்திருத்தத் திட்டத்திற்கு நாடாளுமன்ற கமிட்டி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், தங்களது தோல்விக்கு பொறுப்பேற்று ஆட்சியை கலைப்பதாக, பின்லாந்து பிரதமர் சிப்பிலா தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தையும், அதிபர் சௌலி நினிஸ்டோவிடம் அவர் வழங்கியுள்ளார். 

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பின்லாந்து அரசில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுளளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP