உடைந்தது போர் நிறுத்தம்: காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ள இஸ்ரேல், பதிலுக்கு காஸாவில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
 | 

உடைந்தது போர் நிறுத்தம்: காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ள இஸ்ரேல், பதிலுக்கு காஸாவில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. 

மார்ச் மாத இறுதியில் இருந்து காஸா மக்கள் இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லையை நெருங்கும் அவர்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதுவரை இந்த தாக்குதல்களில், 120 இறந்துள்ளனர். இதில், பலஸ்தீன மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய சென்ற இளம் மருத்துவர் ஒருவரும் இறந்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த அடுத்த நாளே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலுக்கு ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்கு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் சூழ்ந்துள்ளது.

பின்னணி:

சுற்றிலும் இஸ்ரேலை கொண்டுள்ள காஸா என்ற சிறிய பாலஸ்தீன பகுதியில்  உள்ள ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பு, இஸ்ரேலின் மீது தாக்குதல்கள் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் தாக்குவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் இஸ்ரேல் எல்லைக்குள் வந்து விழும் முன், தடுப்பு தொழில்நுட்பத்தால் வானிலேயே சிதறிவிடும். ஆனால், பதிலுக்கு இஸ்ரேல் நடத்தும் ராக்கெட் தாக்குதல்கள் காஸாவை நிலைகுலைய செய்துவிடும். தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில், பெரும்பாலும் பாதிக்கப்படுவது காஸா பகுதியின் பொதுமக்கள் தான்.

இதனால் காஸா மீது தனது பதில் தாக்குதலின் வீரியத்தை இஸ்ரேல் குறைக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பதில் தாக்குதலை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என இஸ்ரேல் கூறி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP