பிரெக்சிட்: ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தத்துக்கு வந்தது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை பிரிக்கும் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு தரப்புக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
 | 

பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் அரசுக்கு பல மாதங்களாக தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்தது. பிரிட்டனை போல மற்ற நாடுகளும் யூனியனை விட்டு பிரிய முயற்சிக்க கூடாது என்பதற்காக, ஐரோப்பிய யூனியன், பிரிட்டனுக்கு சலுகைகள் வழங்க தயங்கி வந்தது. 

பிரெக்சிட்: ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தத்துக்கு வந்தது பிரிட்டன்

கடும் பேச்சுவார்த்தையின் விளைவாக, சுமூகமான ஒப்பந்தத்துக்கு வந்துள்ளதாக, பேச்சுவார்த்தை நடத்தும் மூத்த பிரதிநிதிகள் மைக்கேல் பார்னியர் மற்றும் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளனர். 

இந்த ஒப்பந்தத்தின் மூலம், முழுவதும் பிரிட்டனை விட்டு பிரிவதற்கு முன், இடைநிலை காலத்தில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையே  நடக்கும் வர்த்தக விதிகள் பற்றி  ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளியன்று நடைபெறும் ஐரோப்பிய உச்சி மாநாட்டில் கையெழுத்தாகும் என தெரிகிறது. கையெழுத்தான பின், இந்த இடைநிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும், என ஐரோப்பிய தரப்பு பிரதிநிதி பார்னியர் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP