பிரேசில் நாட்டு சிறையில் கலவரம்; 10 பேர் பலி

பிரேசில் நாட்டு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

பிரேசில் நாட்டு சிறையில் கலவரம்; 10 பேர் பலி


பிரேசில் நாட்டு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசில் நாட்டின் வட கிழக்கில் உள்ள செரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் ஒரு சிலர் வந்து தடுத்தும் கட்டுக்கடங்காமல் சண்டை நடந்துள்ளது. பின்னர் காவல்துறையினரும், சிறைத்துறை அதிகாரிகளும் வந்து கலவரத்தை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே கடுமையான மோதலில் 10 கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 7 கைதிகள் சிறுகாயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 3 கைதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இதில் தொடர்புடைய 44 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP