ரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்!

முன்னாள் சோவியத் யூனியன் நாடான பெலாரஸ், ரஷ்யாவுடன் மீண்டும் இணைக்கப்படலாம் என்றும், பெலாரஸ் மக்களும் அதையே விரும்புவதாகவும் அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷெங்கோ தெரிவித்துள்ளார்.
 | 

ரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்!

முன்னாள் சோவியத் யூனியன் நாடான பெலாரஸ், ரஷ்யாவுடன் மீண்டும் இணைக்கப்படலாம் என்றும், பெலாரஸ் மக்களும் அதையே விரும்புவதாகவும் அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷெங்கோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் யூனியன் நாடான பெலாரஸ், ரஷ்யாவின் கூட்டணி நாடாக இருந்து வருகிறது. 1994ம் ஆண்டு முதல், அந்நாட்டின் அதிபராக, சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறார் அலெக்சாண்டர் லூகாஷெங்கோ. இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வரும் நிலையில், ரஷ்யாவுடன் பெலாரஸை இணைக்க அந்நாட்டு மக்கள் விரும்புவதாக அதிபர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினுடன் நடைபெற்ற மூன்று நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய அவர், "இருவரும் நாளையே இணையலாம். எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ரஷ்யாவும், பெலாரஸும் தயாராக உள்ளதா? இணைவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், எங்களது முயற்சிகளையும், மக்களையும் பொருத்தவரை நாங்கள் தயார்" என்றும் கூறினார்.

போலந்து மற்றும் லித்துவேனியா நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள பெலாரஸ், ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முயற்சிகள் நடப்பது, சோவியத் போல மற்றொரு யூனியனை உருவாக்க ரஷ்ய அதிபர் புடின் எடுத்து வரும் முயற்சி என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP