4வது முறை ஜெர்மன் சான்சலராக பதவியேற்றார் ஏஞ்செலா மெர்க்கெல்

ஜெர்மனி நாட்டின் சான்சலராக ஏஞ்சலா மெர்க்கெல் இன்று மீண்டும் பதவியேற்றார். தேர்தலுக்கு பின் பல மாதங்களாக எதிர்கட்சிகளுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளின் பலனாக மீண்டும் வெற்றிகரமாக ஆட்சியமைத்துள்ளது மெர்கெல்லின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி கட்சி.
 | 

செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தலில், மெர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை பெற்றாலும், பெரும்பான்மை பெற முடியவில்லை. மேலும், வலதுசாரி கொள்கைகளை கொண்ட சர்ச்சைக்குரிய AfD என்ற கட்சி தனது ஒட்டு வங்கியை அதிகரித்தது. இதுவரை எந்த தேர்தலிலும் வெல்லாத AfD, 94 இடங்களை வென்றது. 

AfD கட்சியை ஆட்சியில் பங்குபெறவிடாமல் தடுக்க, பிரதான எதிர்க்கட்சியான சமுக ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் மெர்க்கெல். 6 மாத பேச்சுவார்த்தைக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் மெர்க்கெலின் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த கூட்டணி 2021ம் ஆண்டுவரை நிச்சயம் நீடிக்கும் என இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன. இன்று 4வது முறையாக மீண்டும் ஜெர்மன் சான்சலராக மெர்க்கெல் பதவியேற்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP