ஆம்ஸ்டர்டாம் துப்பாக்கிச் சூடு பயங்கரவாத தாக்குதல் இல்லை!

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் படுகாயம் அடைந்தனர். இது பயங்கரவாதியின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நேற்று இரவு 17 வயது இளைஞன் ஒருவன் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில், ஒருவர் உயிரிழந்தார். இளைஞர், இளம்பெண் என இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவன் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். அந்த இளைஞன் மொராக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவனாக இருக்கலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது. 

எதனால் துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்குள்ளாக இது பயங்கரவாதிகள் தாக்குதல் என்பது போல வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை. எனவே, வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம், நம்ப வேண்டாம் என்று ஆம்ஸ்டர்டாம் நகரப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP