அமெரிக்காவின் போக்கு பயமுறுத்துகிறது!: ஜெர்மன் தலைவர் வருத்தம்

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என ட்ரம்ப் அரசு கூறி வருவது, அச்சத்தை ஏற்படுத்துவதாக ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.
 | 

அமெரிக்காவின் போக்கு பயமுறுத்துகிறது!: ஜெர்மன் தலைவர் வருத்தம்

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என ட்ரம்ப் அரசு கூறி வருவது, அச்சத்தை ஏற்படுத்துவதாக ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் மூனிச் நகரில், சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்து கொண்டார். பல்வேறு நிகழ்வுகளில், அமெரிக்க அரசு ஐரோப்பிய நாடுகளையும், நேட்டோ படையையும்  விமர்சித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் இருந்து பென்ஸுக்கு உற்சாக வரவேற்பு கிடைக்கவில்லை. 

தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களால், அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்படைவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், ஐரோப்பிய கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பின்புலமாக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்க வர்த்தகத்துறை தனது அறிக்கையில் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், அமெரிக்கா செல்லும் பாதை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்தார். மேலும், ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ  கார் நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையே, அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக ஐரோப்பிய இறக்குமதி வாகனங்கள் மீது, 25% வரி சுமத்த உள்ளதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தார். முக்கியமாக ஆடி, பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட கார்களை தயாரிக்கும் ஜெர்மனி மீது கடும் வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை பின்வாங்குவதாக ட்ரம்ப் தெரிவித்தது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என பல்வேறு நாடுகளும் உளவுத்துறைகளும் எச்சரித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP