பிரபல கால்பந்து வீரருடன் கடலில் விழுந்த விமானம்; ஒரு உடல் கண்டெடுப்பு!

அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், விமான பாகங்களுக்கு நடுவே மீட்பு படையினர் ஒரு உடலை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
 | 

பிரபல கால்பந்து வீரருடன் கடலில் விழுந்த விமானம்; ஒரு உடல் கண்டெடுப்பு!

அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், விமான பாகங்களுக்கு நடுவே மீட்பு படையினர் ஒரு உடலை கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் நான்டஸ் அணியில்  விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் எமிலியானோ சாலாவை சில தினங்களுக்கு முன் வேல்ஸ் நாட்டை சேர்ந்த கார்டிஃப் சிட்டி அணி வாங்கியது. பெருந்தொகை கொடுத்து வாங்கியதால், அவரின் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். 

தனது அணி வீரர்களிடம் விடைபெற்றுவிட்டு, இருவர் மட்டுமே பயணம் செய்யும் ஒரு சிறிய ரக விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டில் இருந்து வேல்ஸுக்கு சாலா வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது விமானம் மாயமானது. கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக சந்தேகப்பட்ட, நிலையில் மீட்பு தொடர்ந்து நடைபெற்று வந்தன. இரு தினங்களுக்கு முன் மீட்புப்படையினர் விமானத்தின் பாகங்களை இங்கிலீஷ் சேனல் கடலில் கண்டுபிடித்தனர். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ரோவர் என்ற இயந்திரம் மூலம் உடலை தேடி வந்தனர். இந்நிலையில், விமானத்திற்குள் ஒருவரின் உடல் இருப்பதை ரோவரில் உள்ள கேமரா மூலம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அது கால்பந்து வீரருடைய உடலா அல்லது, விமானியுடையதா என்பது இன்னும் தெரியவில்லை. உடலை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP