கல்லூரி மாணவன் நடத்திய கொலைவெறி தாக்குதல்; 18 பேர் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு க்ரைமியா பகுதியில் உள்ள கெர்ச் நகரத்தில், கல்லூரி மாணவன் ஒருவன் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 19 பேர் இறந்துள்ளனர்.
 | 

18 வயதான மாணவர் வ்லாடிஸ்லவ் ரோஸ்ல்யகோவ், நேற்று திடீரென தனது கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தார். முதலில் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்த அவர், பின்னர், தனது கையில் இருந்த துப்பாக்கியால், சக மாணவர்களையும் பொதுமக்களையும் நோக்கி சரமாரியாக சுடத் துவங்கியுள்ளார். 

இந்த் கொடூர சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் இறந்துள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், வீடியோ ஆதாரங்களை வைத்து, குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால், அவர் சம்பவத்தின் பின், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பின்னர் தெரிவித்தனர். 

இறந்தவர்களில் பெரும்பாலானோர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP