பிறவாத சகோதரியுடன் ஒட்டி வாழும் பிலிப்பைன்ஸ் சிறுமி

பிலிப்பைன்ஸில் 14 வயது சிறுமியின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் மற்றொரு உருவகத்தை அதாவது கால்கள் போன்ற உறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்ற திட்டமிடப்படுகிறது.
 | 

பிறவாத சகோதரியுடன் ஒட்டி வாழும் பிலிப்பைன்ஸ் சிறுமி

பிலிப்பைன்ஸில் 14 வயது சிறுமியின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் மற்றொரு உருவகத்தை அதாவது 2 கால்கள் மற்றும் ஒரு கைப் போன்ற உறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்ற திட்டமிடப்படுகிறது. 

பிலிப்பைன்சின் இலிகன் என்றப் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ் (வயது 14)  இந்தச் சிறுமிக்கு பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே வயிற்றுக்கு மேல கால்கள் இருந்துள்ளது. ஆரம்பத்தில் இதனால் எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. ஆனால் சிறுமி வளர வளர வயிற்றுப்பகுதியில் ஒரு நீள வாக்கில் அந்த 2 கால்களும் ஒரு கையும் சேர்ந்து வளர்ந்தது. அதோடு கால்களுக்கு இடையே ஆசனவாய் போல இருக்கும் பகுதியில் அன்றாடம் கழிவுகளும் வெளியாகிறது. 

இதனால் சிறுமிக்கு மற்ற குழந்தைகள் போல செயல்படாத நிலை உருவானது. கடும் அவதிப்பட்டு வந்த அந்த சிறுமிக்கு, தற்போது உள்ளூர் மக்களின் உதவியோடு தாய்லாந்தில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து வெரோனிகா காமிங்யூஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கூறுகையில், "நான் சிறு வயதில் இருக்கும் போது ஒரு சிறிய அளவு கால்போன்று தெரிந்தது. அதன் பின் நான் வளர வளர, அதுவும் வளர ஆரம்பித்தது. அது இரண்டும் மிகவும் எடை கொண்டதாக இருக்கும். இதனால் நான் கடும் அவதிக்குள்ளாவேன், எனது கால், கை நகங்களை வெட்டுவது போல, அதற்கு வளர்ந்த நகங்களையும் வெட்டுவேன்" என்றார். 

பிறவாத சகோதரியுடன் ஒட்டி வாழும் பிலிப்பைன்ஸ் சிறுமி

மேலும் வெரோனிகாவின் தாயா கூறுகையில், "நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்களை சரியாக சென்று பார்க்கவில்லை, நான் இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்று தான் நினைத்தேன். ஆனால் எதிர்பாரதவிதமாக அது இரட்டை குழந்தை இல்லை. வெரோனிகா காமிங்யூஸ்  தான் பிறந்தாள். அப்போது இரட்டை குழந்தை என நினைத்த அந்த குழந்தையின் வளர்ச்சி சரியில்லாத காரணத்தினால், அந்த குழந்தையின் உடல் பாகங்கள் அப்படியே வெரோனிகா காமிங்யூஸிடம் ஓட்டி வளர்ந்துள்ளது.

இதன் காரணமாக அவ்வப்போது அவளுக்கு அவ்வப்போது சிரமம் ஏற்படும்.  சில நேரம் அதில் இரத்தம் கூட வந்துள்ளது. நாங்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் இதை சுலபமாக நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உள்ளூர் மக்கள் உதவியுள்ளதால், என் மகள் அறுவை சிகிச்சைக்காக தாய்லாந்து செல்கிறாள். விரைவில் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது" என்றுக் கூறியுள்ளார். 

ஆனால் பிலிப்பைஸ் கிராம மக்கள் இதனை நம்பிக்கை சார்த்து பார்க்கின்றனர். அதாவது, வெரோனிகா காமிங்யூஸுடன் இரட்டை குழந்தையாக பிறக்க வேண்டிய சகோதரி எதிர்ப்பாராத விதமாக வயிற்றிலேயே இறந்துவிட்டாள். வெரோனிகாவை பிரிய மனமில்லாமல் அவளுடன் சேர்ந்து ஒட்டி வளர்ந்து வருகிறாள் என்று அப்பகுதி மக்கள்  கூறி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP