எத்தியோப்பியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 38 பேர் பலி

வடக்கு எத்தியோப்பியாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பயணிகள் உயிரிழந்தனர்.
 | 

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அதிகமான மக்கள் சாலை பயணங்களுக்குப் பேருந்துகளையே சார்ந்துள்ளனர். இங்கு சமீப ஆண்டுகளில் சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எத்தியோப்பியாவின்  அம்ஹாரா மாவட்டத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன. 

இந்த விபத்து குறித்து  அம்ஹாரா மண்டல செய்தி தொடர்பாளர் நிகுசு திலாஹன் கூறுகையில், “விபத்திற்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புபணிகள் துரித கதியில் நடத்தப்பட்டன” என்று தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP