அரசை விமர்சித்தால் 15 நாட்கள் சிறை: ரஷ்யாவின் புதிய சட்டம்

ரஷ்ய அரசை விமர்சித்தால், 100,000 ரூபிள்ஸ் அபராதம் அல்லது 15 நாட்கள் வரை சிறை, என்ற புதிய சர்ச்சைக்குரிய சட்டத்தை ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
 | 

அரசை விமர்சித்தால் 15 நாட்கள் சிறை: ரஷ்யாவின் புதிய சட்டம்

ரஷ்ய அரசை விமர்சித்தால், 100,000 ரூபிள்ஸ் அபராதம் அல்லது 15 நாட்கள் வரை சிறை, என்ற புதிய சர்ச்சைக்குரிய சட்டத்தை ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. 

ரஷ்யாவில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வரும் நிலையில், தற்போது அரசை விமர்சித்தாலே சிறை செல்ல வேண்டிய நிலை அந்நாட்டின் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின் படி, சமூக வலைத்தளங்களில், ரஷ்யா அரசை விமர்சிக்குமாறு பதிவுகள் இடப்பட்டால், கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 100,000 ரூபிள்ஸ் அதாவது சுமார் 1 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 15 நாட்கள் சிறை செல்ல வேண்டும். இதில், ரஷ்யா அரசு, சமூகம், நாட்டின் சின்னங்கள், அரசியல் சாசனம், அதிகாரிகளை விமர்சிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், சரியாக வரையறுக்கப்படாததால், புடினையோ அல்லது, ரஷ்ய அரசையோ, சாதாரணமாக விமர்சனம் செய்து கருத்துக்கள் பதிவு செய்தாலே, அவர்களை சிறையில் அடைக்க முடியும் என ரஷ்ய தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. இது சோவியத் யூனியன் காலத்து சர்வாதிகார சட்டங்களை பிரதிபலிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே பத்திரிகை சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள ரஷ்யாவில் இந்த சட்டத்தை பயன்படுத்தி, பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் குறிவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP