உடற்பயிற்சியின்மையால் 140 கோடி பேருக்கு அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலக அளவில் 140 கோடி ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சியின்மையால் கடுமையான நோய்கள் ஏற்படக் கூடிய அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 | 

உடற்பயிற்சியின்மையால் 140 கோடி பேருக்கு அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகளவில் 140 கோடி பேர் உடற்பயிர்சியின்மையால் கடுமையான நோய் ஏற்படக் கூடிய அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
    
இருப்பினும் உடற்பற்சி குறித்த விழிப்புணர்வு 2011க்கு பின் சற்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 140 கோடி என்பது உலக மக்கள் தொகையின் கால் பங்கு ஆகும். அதாவது 4ல் ஒருவருக்கு நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக பொருள். 

உடலின் அநேக உறுப்புகளுக்கும் தேவையான தினசரி பயிற்சி செய்யாததால் உடல் நலத்துக்கு கேடு விளைகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் புற்று நோய் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. சரிவர உடற்பயிற்சி செய்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சிக்கு தினசரி வேளைகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. 

இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 'தி லான்சைட் குளோபல் ஹெல்த்' என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 

இது குறித்த விரிவான ஆய்வு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி அந்த ஆய்வு முடிவை கட்டுரை எவடிவில் வெளியிட்டுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP