லிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலி: ஐ.நா. சபை இரங்கல்    

லிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலி: ஐ.நா. சபை இரங்கல்
 | 

லிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலி: ஐ.நா. சபை இரங்கல்    

லிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. சபை இரங்கல் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக 123 அகதிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சென்ற ரப்பர் படகு யாரும் எதிர் பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதில் 3 குழந்தைகள் உட்பட 103 பேர் கடலில் மூழ்கி மூழ்கி உயிர் இழந்தனர். இதில் 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இந்த தகவலை,  ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. இது குறித்து  ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.       
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP