டெஸ்லா தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்

உலகின் முன்னணி எலக்டரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைமையில் பொறுப்பில் இருந்து விலகுவதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 | 

டெஸ்லா தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்

எலக்டரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைமையில் பொறுப்பில் இருந்து விலகுவதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் நாசாவிற்கு போட்டியாக விண்வெளியில் பல்வேறு ஆராய்சிகளையும் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எலன் மஸ்க் கடந்த ஆகஸ்ட் மாதம் டெஸ்லா முழுவதையும் தனதாக்கி கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முடிவுக்கு பின்னர் கிடைத்த எதிர்மறையான கருத்துக்களை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து தரப்பினரிடமும் எலான் மஸ்க் கடந்த ஒரு வார காலமாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கும் முடிவில் இருந்து பின் வாங்குவதாக அறிவித்தார். 

இதனையடுத்து எலன் மஸ்க் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட முயன்றதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதற்கு  டெஸ்லா நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.290 கோடி தொகையை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. இந்த தொகையை செலுத்த எலன் மஸ்க்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அடுத்த 45 நாட்களுக்குள் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மஸ்க் விலக வேண்டும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நிறுவனத்தின் தலைவராக இருக்க கூடாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனால், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக எலன் மஸ்க் முடிவு செய்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP